\
‘சீமராஜா’விற்காக தாடி வளர்த்த சிவகார்த்திகேயன்

‘சீமராஜா’விற்காக தாடி வளர்த்த சிவகார்த்திகேயன்

‘சீமராஜா’விற்காக தாடி வளர்த்த சிவகார்த்திகேயன்
Published on

நடிகர் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’படத்திற்காக புதிய லுக்கில் தோன்ற இருக்கிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘சீமராஜா’. அந்தப் படத்தின் படப்பிடிப்பு திரை உலக வேலை நிறுத்தத்தால் தடைபட்டது. படத்தின் இரண்டாம் பகுதிக்காக சிவா தனது தோற்றத்தை மாற்றி நடிக்க வேண்டும். ஆகவே அதற்காக அவருக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. கதைப்படி அவர் இரண்டாம் பகுதில் தாடியோடு தோன்ற இருக்கிறார். எனவே சிவா தனது முகத்தில் தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். 

இது சம்பந்தமாக படக்குழுவை சார்ந்தவர்கள் “ஆமாம். அவரது தோற்றம் இரண்டாம் பகுதியில் தாடியோடு இருக்கும். அது சிவாவிற்கு புதிய லுக்கை கொடுக்கும். இதன் பகுதியை குற்றாலத்தில் எடுக்க நினைத்திருந்தோம். ஆனால் தற்போது தலகோணத்தில் நடத்துவதாக திட்டமிட்டுள்ளோம். மே 24 ஷூட்டிங் தொடங்க உள்ளது. மேலும் அனல் அரசு வடிவமைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளை சென்னையில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். அந்த ஷூட்டிங் 10 நாள் நடக்க உள்ளது. படத்தின் டப்பிங் வேலைகள் இந்தமாதம் 15ல் தொடங்க உள்ளது. மொத்த படப்பிடிப்பு வேலைகள் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது” என்கிறார்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com