சிகிச்சைக்காக புது கெட்-அப்? ஓவியாவுக்கு என்ன ஆச்சு?
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும், வெளியே வந்த பிறகும் ஓவியா பற்றி புதுபுதுத் தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் இல்லத்தில் மன அழுத்தம் ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஓவியாவுக்கு மன ரீதியாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
தற்போது அவர் ஓய்வெடுத்து வருகிறார். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஷ்ணு விஷால் நடிக்க உள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய்-யின் அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலரும் தங்களது படங்களில் ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதிய கெட்-அப்பிற்கு மாறியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஓவியாவுக்கு புதிய ஹாலிவுட் படம் ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த புதிய ஹேர்ஸ்டைலில் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் ஓவியாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதால் கப்பிங் தெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கப்பிங் தெரபி கொடுக்கப்பட்டவர்களுக்கு காதுக்கு மேலே ஒரு சிறிய ஆபரேஷன் செய்யப்படும். அதற்காகவே காதுக்கு மேலே உள்ள முடி அகற்றப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஓவியா தனக்கு பைபோலர் டிஸ்ஆர்டர் இருக்கிறது என வெளிப்படையாக கூறியிருந்தார்.