\
நயன்தாராவின் புதிய படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டம்

நயன்தாராவின் புதிய படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டம்

நயன்தாராவின் புதிய படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டம்
Published on

நயன்தாரா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விக்னேஷ் என்ற அறிமுக இயக்குனர் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. குடும்ப பின்னணியில் திரில்லர் வகையில் எடுக்கப்படும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் நடைபெற்று வருகிறது.

மேலும் ஆகஸ்ட் இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக நயன்தாரா 40 நாட்கள் ஒதுக்கியுள்ளார். சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கோவையில் சில நாட்கள் இதற்கான படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். விக்னேஷ் இயக்கும் இந்த படத்திற்கு தமிழ் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல் சார்பட்டா பரம்பரை படத்தின் எடிட்டர் செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com