பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய நடிகை... அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய நடிகை... அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய நடிகை... அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து புது போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

ஓவியா வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் அடுத்தடுத்த போட்டியாளர்களை களமிறக்கி வருகின்றனர். இறுதியாக கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என தெரிவித்து இருந்தார். அவர் அறிவிப்பதற்கு முன்பே பிந்து மாதவி களமிறக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சுஜா வருணியும், நேற்று சிந்து சமவெளியில் நடித்த ஹாரிஷ் கல்யாணும் புதிதாக களமிறங்கினர். இந்நிலையில் அடுத்த வரவாக நடிகை காஜல் பசுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் பங்கேற்க இருக்கிறார். 

பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி, ஏராளமான படங்களில் நடிகையாக நடித்துள்ள காஜல் பசுபதி, ஆட்டோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து இறங்கி போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்ட புதிய புரமோவில் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com