“சுஷாந்த் குடும்பத்தினருக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க” - நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி

“சுஷாந்த் குடும்பத்தினருக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க” - நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி
“சுஷாந்த் குடும்பத்தினருக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க” - நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அடுத்தடுத்த விசாரணை, செய்திகள் பரவிவந்த நிலையில் கடைசியாக ‘தில் பெச்சாரா’ படத்தில் அவருடன் நடித்த நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி அவரது குடும்பத்திற்கு நேரம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

கடந்த மாதம் நடந்த ராஜ்புட்டின் மரணத்தால் பலரும் மனநலம், நட்சத்திர அந்தஸ்து, சினிமா ஆதரவு பற்றி சோஷியல் மீடியாக்களில் அவரவர் கருத்துகளை தெரிவித்து வந்தனர். கடந்த செவ்வாயன்று சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், அவரது மரணத்திற்கு காரணம் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்திதான் என போலீஸில் புகார் அளித்தார்.

தனது வாழ்க்கையை ஏன் இவ்வாறு முடித்துக்கொள்ள வேண்டும் என சுஷாந்த் நினைத்தார் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவரது மரணத்தைப் பற்றிய கவலையைத் தாண்டி தேவையில்லாத வதந்திகள், வெறுப்புகளைப் பரப்பி வருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக அவரது குடும்பத்திற்கு துக்கம் கடைபிடிக்க நேரம் வழங்கப்படவில்லை. அவரது ரசிகர்கள், சக நடிகர்களுக்கு அவரின் இழப்பு ஏற்படுத்திய தாக்கத்தைவிட அவரது குடும்பத்தினருக்கு அதிக தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் மறந்துவிட்டோம். இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது அவரது குடும்பத்தினருக்கான நேரம் மற்றும் இடத்தை ஒதுக்குவதுதான். என்ன நடந்தது என்பதை ரசிகர்களோ, குடும்பத்தினரோ யாரும் அறியபோவதில்லை. இதனால் யாரும் உள்ளேயே அடைந்துகொள்ள போவதில்லை.

அவரது இறப்புக்கு பிறகு காட்டும் அக்கறையையும் அன்பையும் அவர் இருக்கும்போதே காட்டியிருக்கலாம். இப்போது பேசப்படும் அனைத்துமே கணிப்புகளாகத்தான் உள்ளது. நெபாடிஸம் பற்றி இப்போதுதான் பேசுகிறார்கள். ஆனால் அது எப்போதும் இருக்கிறது. இனிமேலும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதைப் பற்றி பேச ஏன் ஒருவரின் மரணத்தைப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் இறந்தவரையும் அவரது குடும்பத்தையும் நாம் மதிக்கவில்லை என்றே தெரிகிறது என முகர்ஜி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com