நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Published on

நடிகை நயன்தாரா பார்வையற்றப் பெண்ணாக நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார், இயக்குநர் மிலிந்த் ராவ். இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி வருகிறார். இதில், பார்வையற்றப் பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா தனது அறிவாற்றலால் கொடூரமான சீரியல் கில்லரை எப்படி கண்டுப் பிடிக்கிறார் என்பதே கதை.

நானும் ரவுடிதான் படத்தை படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நேற்று விக்னேஷ் சிவன் அக்டோபர் 22 நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com