''யார் இது?'' தலைவி ஃபர்ஸ்ட் லுக்கை கலாய்க்கும் இணையவாசிகள்!

''யார் இது?'' தலைவி ஃபர்ஸ்ட் லுக்கை கலாய்க்கும் இணையவாசிகள்!

''யார் இது?'' தலைவி ஃபர்ஸ்ட் லுக்கை கலாய்க்கும் இணையவாசிகள்!
Published on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  ’தலைவி’ என்ற படம் உருவாகி வருகிறது. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இவர், தமிழில் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை விஜய் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்காக கங்கனா தமிழ், பரதநாட்டியம் ஆகியவை கற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கை வரை என்பது போல் ஃபர்ஸ்ட் லுக் டீசர் அமைந்துள்ளது. ‘வெண்ணிற ஆடை’ என்ற படம் மூலம் தான் ஜெயலலிதா சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனை நினைவுபடுத்தும் விதமாக ‘வெண்ணிற ஆடை’க்ளப் போர்டுடன் (clap board) டீஸர் தொடங்குகிறது. 

ஜெயலலிதா சினிமாக்களில் நடித்த காலங்களில் சிறந்த நடிகை என்பதோடு, எல்லாதவிதமான நடனங்களிலும் வல்லவர் என பெயர் எடுத்தவர். அதனைச் சொல்லும் விதமாக, மாடல் உடையில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் ஆடும் காட்சிகள் ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் இடம்பெற்றுள்ளது. 

அதனைத்தொடர்ந்து பச்சை நிற சேலையில் பொதுக்கூட்ட மேடையில் மக்களை பார்த்து கையசைக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அனிமேஷன் வீடியோ வகையில் இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ‘உங்களுக்கு பெயர் தான் தெரியும். ஆனால் வாழ்க்கை கதை தெரியாது’என ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் ஒரு வரியும் அமைந்திருக்கிறது.

இதனிடையே தலைவி ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் இருக்கும், கங்கனா ரணாவத், ஜெயலலிதா சாயலில் இல்லை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் ஜெயலலிதா எங்கே? எனவும் சிலர் நக்கல் அடிக்கும் விதமாக கலாய்த்துள்ளனர். 

சிலரோ, சினிமா வாழ்க்கையை காட்டும் ஜெயலலிதாவின் கேரக்டரில் வரும் கங்கனா ரணாவத்தை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஜெயலலிதாவின் அரசியல் முகம், கங்கனா ரணாவத்திற்கு சிறிதும் பொருந்தவில்லை என்றும் கூறுகின்றனர். நித்யா மேனன், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com