சினிமா
அப்போ ஸ்ருதி, இப்போ பிரியங்கா: கலாய்க்கும் நெட்டிசன்கள்!
அப்போ ஸ்ருதி, இப்போ பிரியங்கா: கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிரியங்கா சோப்ரா மூக்கை அழகாக்க ஆபரேஷன் செய்துகொண்டதாகக் கூறி நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்துள்ளனர்.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டில் பிசி. அவர் நடித்த ஹாலிவுட் படமான ’பேவாட்ச்’ சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரியங்கா. இதைப் பார்த்தவர்கள், ’இப்போதும் மூக்கில் அறுவை சிகிச்சையா? பார்க்க முடியவில்லை’ என்று கிண்டல் செய்துள்ளனர். மேலும் பலர் கொஞ்சம் எல்லைதாண்டி சென்று அவரை கலாய்த்துள்ளனர். ஆனால், பிரியங்கா இதை கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் உதட்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகக் கூறி, ஸ்ருதி ஹாசனை கலாய்த்திருந்தனர்.