நீங்க ஏதும் விருது வாங்கலையா என கேட்ட நெட்டிசன் - சாமர்த்தியமாக பதில் அளித்த விவேக்

நீங்க ஏதும் விருது வாங்கலையா என கேட்ட நெட்டிசன் - சாமர்த்தியமாக பதில் அளித்த விவேக்
நீங்க ஏதும் விருது வாங்கலையா என கேட்ட நெட்டிசன் - சாமர்த்தியமாக பதில் அளித்த விவேக்

2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விவேக் விருது வாங்காதது குறித்து கேள்வி எழுப்பிய ட்விட்டர் வாசி ஒருவருக்கு விவேக் பதில் அளித்துள்ளார்.

2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது அசுரன் படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷூக்கும், சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும், ஜூரி விருது ஒத்த செருப்பு படத்திற்கும், விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமூகவலைத்தளவாசி ஒருவர் நடிகர் விவேக்கிடம் நீங்கள் ஏதும் விருது வாங்கவில்லையா என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் விவேக், “ ரசிகர்களின் அன்பே ஒரு விருது தானே! 35 ஆண்டுகளாக அதை வருடாவருடம் வாங்கிக் கொண்டு இருக்கிறேனே!!!!” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com