\
பிரபாஸ் படத்தின் இணையதள உரிமை ரூ.50 கோடி!

பிரபாஸ் படத்தின் இணையதள உரிமை ரூ.50 கோடி!

பிரபாஸ் படத்தின் இணையதள உரிமை ரூ.50 கோடி!
Published on

பாகுபலி படத்திற்கு பிறகு உலக அளவில் மார்க்கெட்டை பிடித்திருக்கிறார் பிரபாஸ். 
அவர் நடித்து வரும் சாஹோ தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை சுஜீத் இயக்கி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் யுவி கிரியேசன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படத்தின் இணையதள உரிமையை பெற பிரபல இணையதள ஆன்லைன் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப்படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி , மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக இருப்பதால் நெட்ஃபிலிக்ஸ் ஆர்வம் காட்டியது. பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் இணையதள உரிமையாக ரூ.50 கோடியை தயாரிப்பு நிறுவனம் கேட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் அந்தத் தொகைக்கு ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. ஒரு படத்திற்கு இணையதள உரிமைக்காக ரூ.50 கோடியை இதுவரை எந்தப்படமும் பெற்றதில்லை எனக்கூறப்படுகிறது.   
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com