\
உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மார்ச் மாதம் வெளியீடு?

உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மார்ச் மாதம் வெளியீடு?

உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மார்ச் மாதம் வெளியீடு?
Published on: 

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஆர்ட்டிக்கள்15'. இந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இதற்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இறுதிகட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். அதேபோல் படத்தின் டீசரும் தயாராகவுள்ளது. அதை இந்த மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் படத்தையும் குடியரசு தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் வேலைகள் முடிய தாமதமானதால் மார்ச் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com