நெஞ்சம் மறப்பதில்லை பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படம் வெளிவரும் முன்பே வெளியிடு

நெஞ்சம் மறப்பதில்லை பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படம் வெளிவரும் முன்பே வெளியிடு

நெஞ்சம் மறப்பதில்லை பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படம் வெளிவரும் முன்பே வெளியிடு
Published on

நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளிவரும் முன்பே படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோரிங் வெளியிடப்படவுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் கதை அம்சம் கொண்ட பேய் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து இயக்குனர் செல்வராகவன் இசையமைப்பாளர் யுவன் கூட்டணியில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உருவாகி இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.இந்நிலையில் படம் வெளிவரும் முன்பே படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோரிங் வெளியிடப்படவுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் புரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ள படக்குழுவினர் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இம்மாதிரியான புதிய யுத்திகளை கையாண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com