’டே சும்மா இரேண்டா’ - மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா... 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக் பீக்!

’டே சும்மா இரேண்டா’ - மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா... 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக் பீக்!

’டே சும்மா இரேண்டா’ - மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா... 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக் பீக்!
Published on

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் 'நெஞ்சம் மறப்பதில்லை'. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தின் இசை மற்றும் பிஜிஎம்-க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், ட்ரைலர் வெளியானபோது எஸ்.ஜே.சூர்யாவின் வெறித்தனமான நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு கூடியது.

ஆனால், திரைப்படம் வெளியாகாமல் நாட்கள் ஓடின. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் நெஞ்சம் மறப்பதில்லை வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதன் மூன்று ட்ரைலர்கள் வெளியாகி இருந்தன. தற்போது படம் வெளியாகவிருப்பதால் வரும் வாரத்தில் புதிய ட்ரைலர் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஸ்னீக் பீக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், எஸ்.ஜே சூர்யா அமைதியானவராகவும், அதே சமயத்தில் ஆக்ரோஷமானவராகவும் நடிப்பில் பயமுறுத்துகிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com