’வாரிசு’ பட அறிவிப்பு - திரையரங்கில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய நெல்லை ரசிகர்கள்

’வாரிசு’ பட அறிவிப்பு - திரையரங்கில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய நெல்லை ரசிகர்கள்

’வாரிசு’ பட அறிவிப்பு - திரையரங்கில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய நெல்லை ரசிகர்கள்
Published on

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, வாரிசு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியானது! பிரம்மாண்ட கேக் வெட்டி ஆரவாரத்துடன் ரசிகர்கள் கொண்டாடினர்.

நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், மனநலம் குன்றிய மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் உணவு வழங்குதல், ரத்த தான முகாம், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் என பல்வேறு நலத்திட்டப் பணிகளை திட்டமிட்டு ரசிகர்கள் இன்றுமுதல் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’வாரிசு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காண்பதற்காகவே தியேட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டனர். காட்சி திரையிடப்பட்டதும் தியேட்டருக்குள் கூடியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ச்சியாக அரை மணி நேரத்திற்கு தியேட்டரில் விஜய் நடித்துள்ள பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டர் முழுவதும் நிரம்பி ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜயின் படம் பதித்த 10 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com