நெல்லை: அதிசய பனிமாதா ஆலயத்தில் நடிகை அமலாபால் வழிபாடு

நெல்லை: அதிசய பனிமாதா ஆலயத்தில் நடிகை அமலாபால் வழிபாடு
நெல்லை: அதிசய பனிமாதா ஆலயத்தில் நடிகை அமலாபால் வழிபாடு

பிரபல சினிமா நடிகை அமலாபால், கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயத்தில் வழிபாடு செய்தார்.

தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 8-ஆம் நாள் திருவிழா திருப்பணி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் தனது சகோதரருடன் கலந்து கொண்டார். மாதாவை வணங்கிய அமலாபாலுக்கு பங்குத் தந்தை ஜெபம் செய்து ஆசிர்வதித்தார். பின்பு முழங்காலிட்டு ஜெபம் செய்த அமலாபாலுக்கு, பங்குத் தந்தை அதிசய பனிமாதா உருவப்படத்தை வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com