நேரு ஸ்டேடியம் - லியோ
நேரு ஸ்டேடியம் - லியோபுதிய தலைமுறை

LEO வெற்றி விழாவுக்கு தயாராகும் நேரு ஸ்டேடியம்!

இன்று மாலை நடைபெறவுள்ள லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த வீச்சில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது என்பதை குறித்து காணலாம்.

இன்று மாலை நடைபெறவுள்ள லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இடையூறின்றி விழா நடத்த வேண்டும் என்று படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நேரு ஸ்டேடியம்
நேரு ஸ்டேடியம் புதிய தலைமுறை

நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடக்கிறது. இதில் ரசிகர்கள் விழா அரங்கிற்கு செல்கையில், பெரியமேடு ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாறாக அல்லிக்குளம் நீதிமன்றம் வழியாக சென்று நுழைவு வாயில் 6 வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விஜய் ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். வெளியே உள்ள மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 5500 நபர்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையில் விழா  ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு 150 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com