\
ஜெய் நடிக்கும் 'நீயா 2' - புது அப்டேட்

ஜெய் நடிக்கும் 'நீயா 2' - புது அப்டேட்

ஜெய் நடிக்கும் 'நீயா 2' - புது அப்டேட்
Published on

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் ஜெய் நடிக்கும் 'நீயா 2' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 

ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்' வாங்கியுள்ளது.

1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் 'நீயா'. தற்போது 'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக இயக்கியுள்ளார் இயக்குநர் எல்.சுரேஷ். 'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை மறுஉருவாக்கம் செய்திருக்கின்றனர்.

அதோடு, ஷபீர் இசை விருந்தாக 'தொலையுறேன்' பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று 'இன்னொரு ரவுண்டு' என்ற பாடலை வெளியிடப்பட்டுள்ளது. 

தீவிரமான காதல் கதை என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு 'ஜம்போ சினிமாஸ்' சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார். பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

எல்.சுரேஷ் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையும் இவரே செய்கிறார். படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com