“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...!

“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...!
“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்த கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து விட்டு இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும், நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது கையில் கட்டுப்போட்ட நிலையில் எந்தவித விளக்கமுமின்றி வெளியேற்றப்பட்டார். நடந்த காரணங்களை எடுத்துக் கூற முற்பட்டபோது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் அதனை கூற விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்.

மதுமிதா எதனால் தற்கொலை செய்ய முயற்சித்தார்? எதனால் அந்த முடிவை எடுத்தார்? அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கொள்ளும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவரை மனரீதியாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார்களா? தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைவரிடமும் விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக ராஜேஸ்வரி பிரியா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com