\
தமிழ்ப் படத்தில் மீண்டும் நஸ்ரியா

தமிழ்ப் படத்தில் மீண்டும் நஸ்ரியா

தமிழ்ப் படத்தில் மீண்டும் நஸ்ரியா
Published on

திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த நஸ்ரியா, துல்கர் சல்மான் ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். 

’நேரம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து ’திருமணம் எனும் நிக்காஹ்’, ’நய்யாண்டி’, ’ராஜா ராணி' படங்களில் நடித்தார். பின்னர் மலையாள இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பகத் பாசிலை திருமணம் செய்தார். அதற்கு பின் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் ’பெங்களூர் டேஸ்’ அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். இதில் பிருத்விராஜ் ஹீரோ. இந்நிலையில் தமிழிலும் அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். ரா. கார்த்திக் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com