“மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” - திடீர் சைலண்ட் ஏன்? நஸ்ரியா கொடுத்த விளக்கம்.. நடந்தது என்ன?
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நஸ்ரியா கடந்த 2010 ஆம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக தமிழில் வெளியான ‘நேரம்’ படத்தில் அறிமுகமானார். ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர், மலையாளத்தில் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
2014 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. வரதன், கும்ப்ளங்கி நைட்ஸ் உள்ளிட்டப் படங்களை தயாரித்த நஸ்ரியா, கணவர் பகத் பாசிலுடன் வெளியான ’ட்ரான்ஸ்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார். பின்னர் தெலுங்கில் 'அடடே சுந்தரா' படத்தில் நானி உடன் நடித்திருந்தார். இந்நிலையில், நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
கடைசியாக கடந்த ஆண்டு நஸ்ரியா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சூக்சுமதர்ஷினி. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் அந்த படம் வெளியான பிறகு திடீரென தொடர்பில் இருந்து நஸ்ரியா காணாமல் போனார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பலரும் தெரிவித்தனர். இதனால் பல வதந்திகளும் பரவியது.
நஸ்ரியா கொடுத்த விளக்கம்..
இந்நிலையில், நடிகை நஸ்ரியா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் ஏன் இவ்வளவு தான் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்தேன் என்பதை அதில் விளக்கியுள்ளார்.
அந்த அறிக்கையில், “அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து குறித்து பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் எப்போதும் இந்த அற்புதமான சோஷியல் மீடியாவில் தீவிரமாக இயங்கி வந்தேன். இருப்பினும், கடந்த சில மாதங்களாக, எனது உடல்நிலை சிக்கல் மற்றும் தனிப்பட்ட சவால்களால் நான் போராடி வருகிறேன். அவை எனக்கு எல்லோருடனும் தொடர்பில் இருப்பதை கடினமாக்கியுள்ளது.
எனது 30வது பிறந்தநாள், புத்தாண்டு மட்டுமல்லாது எனது 'சூக்ஷமதர்ஷினி' திரைப்படத்தின் வெற்றி, மற்றும் பல முக்கியமான தருணங்களைக் கொண்டாடுவதை நான் தவறவிட்டேன். நான் ஏன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தேன் என்பதை விளக்காததற்கும், நீங்கள் விடுத்த அழைப்புகளை எடுக்காததற்கும் அல்லது அதற்கு பதிலளிக்காததற்கும் எனது அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்படுத்திய சிரமத்திற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். நான் முழுமையாக வெளியுலகை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டேன்.
வேலைக்காக என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்த எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இல்லாததால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.
ஒரு நல்ல விஷயமாக, நேற்று சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதைப் பெற்றதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! அனைத்து அங்கீகாரத்திற்கும் மிக்க நன்றி.
நான் முழுவதுமாக குணமாக இன்னும் காலம் ஆகும். இருப்பினும் நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்ப எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம், ஆனால் நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.
உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்... விரைவில் மீண்டும் இணைகிறேன். உங்கள் முடிவில்லாத ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.