போர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா

போர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா
போர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா

உலகளவில் பிரபலமாக இருக்கும் போர்ப்ஸ் பத்திரிக்கை 2018 ஆம் ஆண்டு அதிகம் வருமானம் ஈட்டிய 100 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஒரே ஒரு தென்னிந்திய நடிகைதான் இடம் பெற்றுள்ளார், அவர் தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா மட்டும்தான்.

100 பிரபலங்கள் கொண்ட பட்டியலில் நயன்தாராவுக்கு 69 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தப்பட்டியலில் பாலிவுட் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இரண்டாவது இடைத்தை பிடித்துள்ளார்.

2003 இல் மலையாள திரைப்பட உலகில் அறிமுகமான நயன்தாரா, தமிழில் நடித்த முதல் படம் "ஐயா". ஏறக்குறைய 15 ஆண்டுகளாக நடித்து வரும் அவர், இன்னும் பல முக்கியப் படங்களை கை வசம் வைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் "விஸ்வாசம்" படத்தில் கூட நடிக்கிறார். மேலும், கதாநாயகியை மையமாக கதையம்சம் கொண்டு படங்களிலும் நடித்து வருவதால் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 66.75 கோடியுடன் 11வது இடத்திலும், ரூ. 50 கோடியுடன் ரஜினி 14வது இடத்திலும் உள்ளனர். ரூ. 30.33 கோடி வருவாயுடன் விஜய் 26வது இடத்திலும், ரூ. 26 கோடி வருவாயுடன் விக்ரம் 29வது இடத்திலும், ரூ. 23.67 கோடியுடன் சூர்யா 34வது இடத்திலும், ரூ. 23.67 கோடியுடன் விஜய் சேதுபதி 34வது இடத்திலும், ரூ. 17.25 கோடியுடன் தனுஷ் 53வது இடத்திலும் உள்ளனர்.

பாலிவுட்டில் இந்தாண்டு ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு தீபிகா படுகோன் ரூ.112.8 கோடி வருவாயுடன் நான்காவது இடத்தை பிடித்து, ஷாருக் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 2 ஆவது இடத்தில் இருந்த நடிகர் ஷாருக்கான் இந்த ஆண்டு ரூ. 56 கோடி வருவாயுடன் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே போன்று கடந்த ஆண்டு 7 வது இடத்தில் இருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா ரூ. 18 கோடி வருமானத்துடன் 49வது இடத்தில் உள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com