\
‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாகும் நயன்தாரா

‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாகும் நயன்தாரா

‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாகும் நயன்தாரா
Published on

’பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

தொடர்ச்சியாக தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை நயன்தாரா, சமீபமாக மலையாளப் படங்களிலும் ஆண்டுக்கு ஒன்று என்று நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சமீபத்தில் வெளியான ‘நிழல்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்னரே ’நேரம்’, ’பிரேமம்’ பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கிறார். வரும் செப்டம்பரில் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘பிரேமம்’ படத்திற்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படம் என்பதால், இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com