நெட்டிசன்கள் கிண்டல் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா தரப்பு விளக்கம்

நெட்டிசன்கள் கிண்டல் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா தரப்பு விளக்கம்

நெட்டிசன்கள் கிண்டல் - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா தரப்பு விளக்கம்
Published on

தடுப்பூசியை காணவில்லை என நெட்டிசன்கள் கிண்டல் செய்ததற்கு நடிகை நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக நடிகை நயன்தாரா, போலியான புகைப்படத்தை வெளியிட்டதாகக்கூறி சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நயன்தாரா தரப்பில் இருந்து தடுப்பூசி நன்றாக தெரியும் படியான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. ஆனால் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் எவரும் பெரிதாக முன்வரவில்லை. ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சர்ச்சைக்குள்ளான முந்தைய புகைப்படம் 

அந்த வகையில் நேற்றுமுன் தினம் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒன்றாக தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

புகைப்படம் வெளியான சில நிமிடங்களில் நயன்தாராவுக்கு தடுப்பூசி போடும் செவிலியரின் கையில் தடுப்பூசி இல்லை என்றும் இது போலியான புகைப்படம் என்றும் நெட்டிசன் கிண்டலடித்து மீம்களை பறக்க விட்டனர். அதற்கு தற்போது விளக்கம் அளிக்கும் வகையில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com