தீபாவளிக்கு வருகிறது நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" !

தீபாவளிக்கு வருகிறது நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" !

தீபாவளிக்கு வருகிறது நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்" !
Published on

நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்த நயன்தாரா, முதன் முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘மாயா’ படத்தில் மாஸ் காட்டினார். மாயா கொடுத்த மாபெரும் வெற்றியில் தொடர்ச்சியாக டோரா,கொலையுதிர் காலம், அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து நாயகிகளாலும் வெற்றியைக் கொடுக்க முடியும். நாயகிகளுக்காகவும் ரசிகர்கள் வருவார்கள் என்பதை அறத்துடன் நிரூபித்தார்.

இந்நிலையில், காமெடி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி, என்.ஜே சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ள மூக்குத்தி அம்மன் வரும் தீபாவளி அன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆர்.ஜே பாலாஜியின் முதல் படமான எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் ஃபிலிம் இனடர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com