‘அறம்2’ இப்போதைக்கு இல்லை என செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் மிகவும் பேசப்பட்ட திரைப்படம் ‘அறம்’. அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து நயன்தாரா அதன் இரண்டாம் பாகத்தில் மீண்டு நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதாக செய்தி பரவியது. அந்தப் படத்தின் இயக்குநர் கோபி நயினார் தற்போது அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கதை ‘அறம்’படத்தின் அடுத்த பாகம் இல்லை என தெரிகிறது. அவர் முற்றிலும் புதிய கோணத்தில் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். ஆகவே ‘அறம்2’ புராஜெட் தற்போதைக்கு இல்லை என செய்தி தருகிறார்கள் இயக்குநரின் நெருங்கிய வட்டத்தினர்.