பிரபுதேவாவுடன் நடிக்க நயன்தாரா ரெடியில்லையே? இந்தி தயாரிப்பாளரின் வருத்தம்
நயன்தாரா அடுத்து தமிழில் நடிக்கும் படம், ‘கொலையுதிர் காலம்’. கமலின் ’உன்னைப் போல் ஒருவன்’, அஜீத்தின் ’பில்லா 2’ படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தை இந்திப் பட தயாரிப்பாளர் வாசு பக்னானி தயாரிக்கிறார். இவர் இந்தியில் ஏராளமான படங்களைத் தயாரித்தவர். இப்போது தமிழுக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘நான் தமிழுக்கு புதிதில்லை. தமிழில் வெளியான ’சின்ன மாப்பிள்ளை’படத்தைப் பார்த்துதான் தயாரிப்பாளர் ஆனேன். அதை இந்தியில் ’கூலி நம்பர் 1’ என்று ரீமேக் செய்தேன். படம் ஹிட்டானதால் தொடர்ந்து அங்கு படம் தயாரித்து வருகிறேன். ’கொலையுதிர் காலம்’ படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக ஜெர்மன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபுதேவா, தமன்னா நடிக்கிறார்கள். இந்தியில் நயன்தாரா ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். நயன்தாரா ரெடி என்றால் நான் அவரை இந்தியில் ஹீரோயினாக நடிக்க வைக்க தயார்தான். ஆனால் அவர் ரெடியில்லையே’ என்றார்.