நயன்தாரா நடித்திருக்கும் டோரா திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அப்படத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் டோரா. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கார் ஒன்று இடம் பெற்றிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் நான்கு நிமிடக் காட்சி குறிப்பிட்ட நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதேபோல், விஜய் சேதுபதி மற்றும் டி ராஜேந்திர் நடித்திருக்கும் கவண் திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. சமீப காலமாக திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னர் குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டும் வெளியிட்டு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் யுக்தியை திரையுலகினர் செயல்படுத்தி வருகின்றனர்.