அமெரிக்காவில் ப்ரியங்கா சோப்ராவை சந்தித்த நயன்தாரா
அமெரிக்காவில் நடிகை ப்ரியங்கா சோப்ராவை சந்தித்துள்ளார் நயன்தாரா. இருவரும் ஜோடியாக போஸ் கொடுக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் நயன்.
தனது காதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அமெரிக்கா சென்றார் நயன்தாரா. ஐநா அமைப்பின் குளோபல் கோல்ஸ் விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ப்ரியங்காவும் அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்நிலையில் இருவரும் நியூயார்க் நகரில் சந்தித்துள்ளனர். இரவு நேர மின் விளக்குகளின் ஒளியில் இந்த அழகான சந்திப்பு நடந்துள்ளது. தென் இந்திய சினிமா உலகில் நயன் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த போதும் அவர் பாலிவுட் பட வாய்ப்புக்கள் பற்றி அதிகம் ஆர்வம் காட்டியதில்லை. இளம் நடிகர்களுடன் நடிப்பதில் மட்டுமே நயன்தாரா ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு ஏற்றவாறு தனது இளமையை ஆண்டுக்கு ஆண்டு குறைத்து கொண்டு வருகிறார் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.