நயன்தாரா கொடி அசைத்து தொடங்கி வைத்த மகளிர் தின பேரணி !
பெண்கள் தினத்தையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய பேரணி வருமான வரித்துறை அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வகையில் இந்நாளை கொண்டாடி வருகின்றனர்.
இதில் நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட புராதன இடங்கள் அனைத்திலும் மகளிருக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் உள்ளிட்ட இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாக்கப்பட்ட புராதன இடங்களை மகளிர் இலவசமாக பார்வையிடலாம்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய பண்பாட்டுத்துறை, வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா வந்திருக்கும் பெண் பயணிகளுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.