‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பை தொடங்கினார் நயன்தாரா..!

‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பை தொடங்கினார் நயன்தாரா..!

‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பை தொடங்கினார் நயன்தாரா..!
Published on

‘எல்கேஜி’ படத்தின் வெற்றியை அடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்குநராக அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். படத்தின் மொத்த கதையும் நயன் மீதுதான் பயணிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.  

இதற்கான பத்திரிகை சந்திப்பின்போது ஆர்ஜே பாலாஜி, “நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவரவுள்ள அம்மன் படம் இது. இதில் சர்ச்சை எதுவும் இருக்காது. கன்னியாகுமரியிலுள்ள அம்மனை, மூக்குத்தி அம்மன் என மக்கள் சொல்வார்கள். ஆகவே அங்கு சென்று பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்க உள்ளோம்” என விளக்கி இருந்தார். மேலும் அம்மனாக நடிப்பதற்காக நயன்தாரா விரதம் ஏற்று வருவதாகவும் பாலாஜி கூறி இருந்தார். 

இந்நிலையில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மான்’ படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அந்தப் படப்பிடிப்பில் நயன் பங்கேற்று உள்ளார். படப்பிடிப்புக்கு முன்னதாக, நயன்தாரா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் மற்றும் திருச்செந்தூரிலுள்ள முருகன் கோயில் ஆகிய இரண்டு இடங்களுக்கும் விக்னேஷ் சிவனுடன் சென்று வழிபட்டார். இந்தப் படத்திற்காகவே இவர் சைவ உணவு பழக்கத்திற்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கெனவே  கடந்த 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்திருந்தார். ஆனால் தமிழில் நயன்தாரா முதன்முறையாக ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் தெய்வமாக நடிக்கிறார். 

இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். இப்படம் நாகர்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்ட உள்ளது. படத்திற்கு கிரிஷ்  இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com