'சென்னை மேயரும் நயன்தாராவும்' - என்ன பேசினார்கள் இருவரும்?

'சென்னை மேயரும் நயன்தாராவும்' - என்ன பேசினார்கள் இருவரும்?

'சென்னை மேயரும் நயன்தாராவும்' - என்ன பேசினார்கள் இருவரும்?
Published on
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயில் சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர்  சிறப்பு தரிசனம் செய்தார். 
சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலில் சென்னை மாநகர பொறுப்பேற்றிருக்கும் மேயர் பிரியா ராஜன் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டன. அதேசமயத்தில் நடிகை நயன்தாரா மற்றும் அவரின் காதலரும் இயக்குனருமான விக்‌னேஷ் சிவன் ஆகியோரும் அந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்தனர்.
சாமி தரிசனம் முடிந்தவுடன் கோயிலில் இருந்த சென்னை மேயரை சந்தித்து நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தற்போது ஏற்றுள்ள பதவியில் சிறந்து விளங்கி மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் நயன்தாரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com