லாரன்ஸ்-க்கு ஜோடியாகும் நயன்தாரா? - ஹாரர் காமெடி படத்தில் இவர்தான் இயக்குநரா?

லாரன்ஸ்-க்கு ஜோடியாகும் நயன்தாரா? - ஹாரர் காமெடி படத்தில் இவர்தான் இயக்குநரா?
லாரன்ஸ்-க்கு ஜோடியாகும் நயன்தாரா? - ஹாரர் காமெடி படத்தில் இவர்தான் இயக்குநரா?

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ திரைப்படம் அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கதிரேசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘அதிகாரம்’, ‘சந்திரமுகி 2’ உள்ளிட்டப் படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும், ‘துர்கா’, ‘ஜிகர்தண்டா 2’, ‘காஞ்சனா 4’ ஆகியப் படங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகவா லாரன்ஸின் புதியப் படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாக உள்ள இந்தப் படத்தை ரத்னகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘மேயாத மான்’. ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கியவர் ரத்னகுமார். மேலும் லோகேஷின் நண்பரான ரத்னகுமார், அவரின் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ வசனம் எழுதியுள்ளதுடன், அடுத்தப் படமான விஜய்யின் ‘லியோ’ படத்திலும் இணை எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார்.

‘லியோ’ படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதியப் படத்தை ரத்னகுமார் இயக்க உள்ளதாகவும், அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது விஜய்யின் மேனஜேரும், ‘மாஸ்டர்’ , ‘லியோ’ படங்களின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா தற்போது ‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com