ரஜினியின் ’நெற்றிக்கண்’ டைட்டிலில் நயன்தாரா

ரஜினியின் ’நெற்றிக்கண்’ டைட்டிலில் நயன்தாரா
ரஜினியின் ’நெற்றிக்கண்’ டைட்டிலில் நயன்தாரா

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் படத்துக்கு 'நெற்றிக்கண்' என்று டைட்டில் வைத்துள்ளனர். இது ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் சொந்தமாகப் படம் தயாரிக்கிறார். இதற்காக ’ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ’அவள்’ என்ற ஹாரார் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ’நெற்றிக்கண்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இது ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான படத்தின் தலைப்பு. 

விசுவின் கதையில், கே.பாலசந்தர் திரைக்கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தை கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தது. ரஜினிகாந்த் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

(நெற்றிக்கண் படத்தில்...)

லட்சுமி, சரிதா, மேனகா, சரத்பாபு உட்பட பலர் நடித்திருந்தனர். 1981 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன, இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.  இந்தப் படத்தின் டைட்டிலை நயன்தாரா நடிக்கும் படத்துக்கு வைத்துள்ளனர்.

இதற்காக ரஜினிகாந்துக்கும் கவிதாலயா நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இது நயன்தாராவுக்கு 65 வது படம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com