\
லைகாவின் அடுத்த தயாரிப்பில் நயன்தாரா

லைகாவின் அடுத்த தயாரிப்பில் நயன்தாரா

லைகாவின் அடுத்த தயாரிப்பில் நயன்தாரா
Published on

2.0 படத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்க இருக்கிறது லைகா ப்ரடெக்சன் நிறுவனம். 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது லைகா நிறுவனம். இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கோகோ படத்தை தயாரிக்க இருக்கிறது லைகா.

இதுகுறித்து லைகா நிறுவனத்தின் நிர்வாகி ராஜூ மகாலிங்கம் கூறும்போது, ‘2.0 படத்தை அடுத்து கோகோ படத்தை தயாரிக்க இருக்கிறோம். கதை பிரமாதமாக இருக்கிறது. டார்க் காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ள இந்தப் படத்தில் நயன்தாரா லீட் ரோலில் நடிக்க இருக்கிறார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். பெரும் பட்ஜெட்டில் உருவாகும் கோகோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com