\
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம், 'டு லெட்'!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம், 'டு லெட்'!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம், 'டு லெட்'!
Published on: 

65வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ’டு லெட்’ படத்துக்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். சிறந்த நடிகைக்கான விருது, டேக் ஆஃப் (மலையாளம்) படத்தில் நடித்த பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு படமாக ராணா நடித்த ’காஸி’ தேர்வாகியுள்ளது.  சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சிறந்த நடிகை விருது, ’மாம்’ படத்தில் நடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த பாடகி: சாஷா திரிபாதி (வான் வருவான், காற்றுவெளியிடை), பாடகர்: கே.ஜே.யேசுதாஸ் (மலையாளம் படம்).
’பாகுபலி-2’ -க்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் மற்றும் பாப்புலர் படம் ஆகிய இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த துணை நடிகர் பஹத் பாசில். சிறந்த இந்திப்படம் ’நியூட்டன்’.  சிறந்த துணை நடிகர்: பஹத் பாசில். சிறந்த மலையாள படம்: தொண்டிமுதலும் திர்க்சாக்ஷியும். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com