\
"நட்சத்திரம் நகர்கிறது படம்தான் உங்கள் சிறந்த படைப்பு"-பா.ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

"நட்சத்திரம் நகர்கிறது படம்தான் உங்கள் சிறந்த படைப்பு"-பா.ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

"நட்சத்திரம் நகர்கிறது படம்தான் உங்கள் சிறந்த படைப்பு"-பா.ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
Published on

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்தான் பா.ரஞ்சித்தின் சிறந்த படைப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் படைப்பான “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியானது.  துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். யாழி ஃபிலிம்ஸுடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு ‘இயக்கம், எழுத்து, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை போன்றவற்றில் இதுவே உங்கள் சிறந்த படைப்பு’ என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டி வாழ்த்தினார். நன்றி சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com