விஜயால் மெர்சலான நாசர் மகன்

விஜயால் மெர்சலான நாசர் மகன்

விஜயால் மெர்சலான நாசர் மகன்
Published on

நடிகர் விஜயின் தீவிர ரசிகரான நாசர் மகன் ஃபைசல், விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் மெர்சல் படத்தின் டைட்டில் லோகோ ஸ்டிக்கரை தனது காரின் பின்புறம் ஒட்டியுள்ளார்.

நடிகர் நாசரின் மகன் ஃபைசல் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ஃபைசல் தனக்குள்ளே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அடிக்கடி எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்ற விஜய் படத்தின் பாடலை கேட்பார் என நாசர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் ஃபைசலை அவரது வீட்டில் நேரில் சந்தித்த நடிகர் விஜய் அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் மெர்சல் படத்தின் டைட்டில் லோகோ ஸ்டிக்கரை தனது காரின் பின்பறம் ஃபைசல் ஒட்டியுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com