ஸ்குவிட் கேம் வெப்சீரிஸூக்கு தமிழில் டப்பிங் கொடுத்த நாசர்

ஸ்குவிட் கேம் வெப்சீரிஸூக்கு தமிழில் டப்பிங் கொடுத்த நாசர்
ஸ்குவிட் கேம் வெப்சீரிஸூக்கு தமிழில் டப்பிங் கொடுத்த நாசர்

ஸ்குவிட் கேம் தொடருக்கு தமிழில் நடிகர் நாசர் வாய்ஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கொரியன் வெப்சீரிஸான ஸ்குவிட் கேம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிய உலக அளவில் பிரபலமடைந்தது. இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சகமாக எகிறியுள்ளது. இதனிடையே, இந்த தொடரையும், மணி ஹெய்ஸ்ட் தொடரைப்போல, தமிழில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அந்த வகையில், அண்மையில் ஸ்குவிட் கேம் வெப்சீரிஸின் தமிழ் ஆடியோவும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரில் வரும் யங்க் சூ உ (young soo oh) என்ற முதியவரின் கதாபாத்திரத்துக்கு நடிகர் நாசர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com