Nanis The Paradise team create a huge sets of Slums
The ParadiesNani

நானியின் `தி பாரடைஸ்' படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட செட்! | The Paradise | Nani

'பாகுபலி' படத்தில் காணப்பட்ட மகிழ்மதி பேரரசைப்போல், இங்கு குடிசைப்பகுதிகளால் ஆன பேரரசு உருவாக்கப்படுகிறது. 
Published on

’தசரா’ படத்திற்கு பின் நானி - ஸ்ரீகாந்த் ஓடேலா கூட்டணி `தி பாரடைஸ்' படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தின் ஜடால் கதாபாத்திற்காக தன் உடலை முறுக்கேற்றி இருக்கிறார் நானி. இதன் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவாகிவருகிறது `தி பாரடைஸ்'. அதற்காகவே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

படக்குழுவின் தகவலின்படி, ” ‘பாகுபலி’ படத்தில் காணப்பட்ட மகிழ்மதி பேரரசைப்போல், இங்கு குடிசைப்பகுதிகளால் ஆன பேரரசு உருவாக்கப்படுகிறது. படத்தின் கதைப்படி, கதாநாயகன் குடிசைப்பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்து, பின்னர் உச்சத்துக்குச் செல்வதை படத்தில் காண்பிக்கின்றனர். அவ்வளவு பெரிய கதைப் பயணத்தை காட்டுவதற்காகவே இந்த மாபெரும் செட் அமைக்கப்படுகிறது. 30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய குடிசை அரங்கு, ’தி பாரடைஸ்’ படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்த அரங்கு உருவாக்கப்படவுள்ளது" என்று கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் இப்படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படம்  2026 மார்ச் 26 அன்று, உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், வங்காளம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 8  மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com