விஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி!

விஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி!
விஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி!

விஜய் சேதுபதியின் ’96’ பட தெலுங்கு ரீமேக்கில் நானி, சமந்தா நடிப்பது உறுதியாகியுள்ளது. 

விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘96’. இதில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளா ர். நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 4-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தை தெலுங்கு ஹீரோ நானி சமீபத்தில் பார்த்தார். படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், தன்னை பாதித்த படங்க ளுள் இதுவும் ஒன்று கூறியிருந்தார். இந்நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ’ஏ வெலிபோயிந்தே மனசு’ என்ற படத்தில் நடித்திருந்தனர். இது தமிழில் வெளியான ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் தெலுங்கு பதிப்பு ஆகும். 

’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com