விஜய்யின் ‘லியோ’ படத்துடன் மோதும் பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ - ஒரே நாளில் ரிலீஸ்!

பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக ‘பகவந்த் கேசரி’ உருவாகியுள்ளது.
பகவந்த் கேசரி-லியோ
பகவந்த் கேசரி-லியோட்விட்டர்

தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. அனில் ரவிபுடி இயக்கியிருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதே தேதியில்தான், நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படமும் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘லியோ’ படம் உருவாகி வருகிறது.  தனுஷின் ‘வாத்தி’ படத்தை இரு மொழிகளிலும் தயாரித்திருந்த பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான  சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் ‘லியோ’ படத்தின் தெலுங்கு திரையரங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருந்தது.

ஒரே நோத்தில் பாலகிருஷ்ணா மற்றும் விஜய்யின் படம் வெளியாவதால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘லியோ’ படத்தின் வசூல் பாதிக்குமா அல்லது அதனை முறியடித்து வசூலில் சாதனை புரியுமா என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com