”தவறுதலாக நடந்துவிட்டது... மன்னித்துவிடுங்கள்” - இளைஞரை அடித்த விவகாரத்தில் நானா படேகர் மன்னிப்பு!

படப்பிடிப்பின்போது இளைஞர் ஒருவரை அடித்த விவகாரத்தில், பாலிவுட் நடிகர் நானா படேகர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
நானா படேகர்
நானா படேகர்புதிய தலைமுறை

வாரணாசியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, தனது அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை, நானா படேகர் ஓங்கி அறைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நானா படேகர், “நான் ஒருவரை அடிப்பதை போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது; படத்தின் ஒரு காட்சிக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு நபர் உள்ளே வந்தார்; அவர் யாரென எனக்குத் தெரியாது. நடிகரென நினைத்து சீனில் இருந்தபடி அடித்துவிட்டு, அவரைப் புறப்படச் சொன்னேன். ஆனால் பின்னரே அவர் எங்கள் குழுவை சேர்ந்தவர் இல்லையென தெரிந்தது. உடனே அவரை அழைக்க நினைத்தேன்; ஆனால் அவர் அதற்குள் சென்றுவிட்டார்; அவரின் நண்பர் யாரோதான் வீடியோ எடுத்திருக்கக்கூடும். மற்றபடி என்னோடு புகைப்படம் எடுக்க வந்த யாரையும் நான் எதுவும் சொல்லவில்லை; நான் இச்செயலை செய்யவில்லை... இச்சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது... ஏதேனும் தவறாக புரிந்திருந்தால், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்... இனி நான் இப்படி செய்ய மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒரு கேட்சைத் தவறவிட்ட ஷமி... ஆனால் அடுத்து நடந்த ட்விஸ்ட்! உலகக்கோப்பையில் புதிய சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com