\
நாகினி நடிகை மருத்துவமனையில் அனுமதி

நாகினி நடிகை மருத்துவமனையில் அனுமதி

நாகினி நடிகை மருத்துவமனையில் அனுமதி
Published on: 

இந்தியில் புகழ்பெற்ற டிவி தொடர், ’நாகின்’ .  பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர் ஹிட்டானது. இதையடுத்து இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், சிங்களம் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. நாகினி என்ற பெயரில் தமிழில் வந்த இந்தத் தொடர் இங்கும் ஹிட். இதன் இரண்டாவது பாகம் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் இச்சாதாரி நாகமாகவும் ஸ்ரேயாவாகவும் நடித்தவர் அடா கான். இரண்டாம் பாகத்திலும் நடித்துவருகிறார்.

மும்பையில் இந்த தொடரின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் நடந்து வந்தது. அப்போது திடீரென்று அடா கான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை அந்தேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சாக்கி நாக்காவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com