நாக சைதன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு விதித்த கட்டுப்பாடும் விவாகரத்து பின்னணியும்

நாக சைதன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு விதித்த கட்டுப்பாடும் விவாகரத்து பின்னணியும்

நாக சைதன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு விதித்த கட்டுப்பாடும் விவாகரத்து பின்னணியும்
Published on

நாக சைதன்யா - சமந்தா நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து பின்னணி குறித்த காரணங்கள் தெரிய வந்துள்ளன.

நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும், சென்னையை சேர்ந்த சமந்தா கணவருடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். அத்துடன் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தம்பதிகள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணம் நாக சைதன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதுதான் என கூறப்பட்டது.  நாக சைதன்யாவைவிட சமந்தா புகழ்பெற்ற இடத்தில் இருப்பதும் கட்டுப்பாடுகள் விதிக்க காரணம் என்று சொல்லப்படுறது. மேலும், சமந்தாவை சினிமாவிலிருந்து முழுவதும் விலகிவிடவும் வற்புறுத்தியிருக்கிறார்கள். அதற்கும், சமந்தா தயாராகத்தான் இருந்திருக்கிறார். ஆனால், ஒருக்கட்டத்தில் நாக சைதன்யாவே பிரியும் முடிவை எடுத்திருக்கிறார்.

இதனால்தான், சமந்தா தன்னுடைய சமூக வலைதளங்களில் இருந்த சமந்தா அக்கினேனி என்ற குடும்ப பெயரை நீக்கி வெறும் S என்ற எழுத்தை மட்டும் வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் பிரிவிற்கு எந்த தொகையும் நாக சைதன்யாவிடம் கேட்கவில்லை என சமந்தா தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் வசித்துவந்த வீட்டையும் சமந்தா தன்னுடைய சொந்த பணத்தை செலுத்தி முறையாக வாங்கிக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com