\
சமுத்திரகனியின் ‘நாடோடிகள்2’ பூஜை

சமுத்திரகனியின் ‘நாடோடிகள்2’ பூஜை

சமுத்திரகனியின் ‘நாடோடிகள்2’ பூஜை
Published on

‘நாடோடிகள்2’ படத்திற்கான பூஜை போடப்பட்டது. அதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். 

இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. இந்தத் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாபெரும் சாதனையை அடைந்தது. ஆகவே அந்தக் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் எடுக்க இருப்பதாக பரவலாக ஒரு பேச்சு நிலவியது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்த்த வேகத்தில் வெளியாகவில்லை. அந்தப் படத்தில் நடித்த சசிகுமார், சமுத்திரகனி, வசந்த் விஜய், பரணி என பலரும் தனித்தனியாக பிசியாக நடிக்கத் தொடங்கியதால் மீண்டும் இணைந்து படம் நடிப்பதில் சிக்கல் இருந்தது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘நாடோடிகள்2’ படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், சமுத்திரகனி, நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி உட்பட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையை சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com