மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு !

மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு !

மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு !
Published on

சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் "நாடோடிகள்'. நண்பர்களுக்கும் காதலர்களுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டது. நாடோடிகள் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வரவேற்புகள் கிடைத்து மாபெரும் வெற்றியை ஈட்டியது. 

இதனையெடுத்து மீண்டும் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி "நாடோடிகள் 2" படத்திற்காக இணைகிறது. இந்தத் திரைப்படத்தில் "காதல் கண் கட்டுதே" மற்றும் ஏமாலி படத்தின் நாயகியான அதுல்யா ரவி, வெகுகாலமாக தமிழ் திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த அஞ்சலியும் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


நாடோடிகள்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுரையில் தொடங்கியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com