பெண்களை வக்கிரமாகப் பேசுவதை தொடர்ந்து செய்தால், தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். ராதாரவியின் அந்தப் பேச்சுக்கு பல ரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் விக்னேஷ்சிவன், ’’பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலி ருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்க ராதாரவி இப்படி செய்கிறார். மூளையற்றவர். அந்த குப்பையின் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது கவலையான விஷயம். இதுதான் ஒரு படத் தை விளம்பரம் செய்யும் விதம் என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதே நல்லது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இது பரிதாபமான நிலை’’ என்று கடுமையானக் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அவரை, திமுக-வில் இருந்து தற்காலிகமாக அந்தக் கட்சி நீக்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராதா ரவியின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் ராதாரவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், ராதாரவிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘’சமீபத்தில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில், பெண்களைக் கொச்சைப் படுத்துவது போல நீங்கள் பேசிய பேச்சைக் கேட்டு உண்மையிலேயே மனது வருந்துகிறது. இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பல காலங்களாக தங்கள் நேர்காணலிலும் மேடைகளிலும் பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறீர்கள். இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக் கூடிய பெண்களுக்கும் மன உளை ச்சளை ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை?
இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமானப் பேச்சுகள் திரைத்துறை மேல் மக்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கையை சீரழிக் கும் என்பதை ஏன் உணரவில்லை? இனி வரும் காலங்களில் நீங்கள் இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படு வீர்கள் என்று நம்புகிறோம். இல்லை என்றால், நடிகர் சங்கம், தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை இந்த கடிதம் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.