\
நாச்சியார் டீசருக்கு ஜோதிகா பதில்

நாச்சியார் டீசருக்கு ஜோதிகா பதில்

நாச்சியார் டீசருக்கு ஜோதிகா பதில்
Published on

நாச்சியார் படத்தின் டீசர் பற்றிய கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜோதியா நடித்து தயாராகியுள்ள படம் ‘நாச்சியார்’. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. டீசரில் சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தை நடிகை ஜோதிகா பேசி இருந்தார். அது குறித்து இயக்குநர் மற்றும் நடிகை ஜோதிகா இதுவரை மெளனம் காத்து வந்தனர். இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அதை பற்றி தற்சமயம் பேச வேண்டாம். படம் வெளியானால் இதுகுறித்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும்” என்று அவர் கூறியுள்ளார்.

நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோதிகா இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com