ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்திய படைப்புகள்! `நாட்டு நாட்டு' சாதனை ஆஸ்கரிலும் தொடருமா?

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்திய படைப்புகள்! `நாட்டு நாட்டு' சாதனை ஆஸ்கரிலும் தொடருமா?
ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்திய படைப்புகள்! `நாட்டு நாட்டு' சாதனை ஆஸ்கரிலும் தொடருமா?

ஆஸ்கர் விருது விழாவில், இறுதிப்பட்டியலுக்கு தகுதிப்பெற்றுள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் சந்திரபோஸ் எழுத்தில் வெளியான நாட்டு நாட்டு பாடல்.

சில தினங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் `சிறந்த ஒரிஜினல் பாடல்’ என்ற விருதை இப்பாடல் தட்டிச் சென்றிருந்தது. இந்நிலையில் இப்போது ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு இப்பாடல் சென்றுள்ளது. தென்னிந்தியத் திரைப்பட பாடல் ஒன்று ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

நாட்டு நாட்டு பாடலுடன் சேர்த்து, Applause என்ற பாடல் (Tell it like a woman படத்துக்காக, Diane Warren எழுதி இசையமைத்தது), Hold my Hand என்ற பாடல் (Top Gun: Maverick படத்துக்காக, Lady gaga Bloodpop எழுதி இசையமைத்தது), Lift me up என்ற பாடல் (Black Panther: Wakanda Forever படத்துக்காக Ryan Coogler Tems எழுதி Tems, Rihanna, Ryan Coogler, Ludwig Goransson இசையமைத்தது ) , This is a life Everything படத்துக்காக, Ryan Lott, David Byrne எழுதி Everywhere all at once Ryan Lott, David Byrne, Mitski இசையமைத்தது) ஆகியவையும் இறுப்பட்டியலுக்கு தகுதிபெற்றுள்ளது.

முன்னதாக கோல்டன் குளோப் விருது பெற்றவுடன் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் எழுந்து சத்தமாக கத்தியபடி துள்ளிகுதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இந்த வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக தங்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்திருந்தது.

கோல்டன் குளோப் போல, ஆஸ்கர் விருதையும் நாட்டு நாட்டு பாடல் பெறும் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். இசையமைப்பாளர் கீரவாணியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு இந்திய படைப்பான The Elephant Whisperers என்ற ஆவணப்படமும் ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. இதை, Kartiki Gonsalves இயக்க, Guneet Monga தயாரித்திருந்தார். இது நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் காண கிடைக்கிறது. கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் ஆவணப்பட பிரிவில் ' All That Breathes' ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. அனைத்து படைப்புகளும் விருது பெற வேண்டுமென இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இறுதிப்பட்டியலுக்கு முன்னேறியதற்கு இணையத்தில் வாழ்த்தும் தெரிவித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com