\
நாச்சியார் டீசர் 4.5 மில்லியன் வீவ்ஸ்

நாச்சியார் டீசர் 4.5 மில்லியன் வீவ்ஸ்

நாச்சியார் டீசர் 4.5 மில்லியன் வீவ்ஸ்
Published on

நாச்சியார் டீசர் 4.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நாச்சியார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் நடிகை ஜோதிகா பயன்படுத்தியிருந்த கெட்ட வார்த்தையால் சர்ச்சையை கிளப்பி இருந்தது. சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்பாகவும் கருத்திட்டு இருந்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து பாலா தரப்போ ஜோதிகா தரப்போ எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. 
இந்நிலையில் டீசர் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதாக பட நிறுவனமான பி ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சர்ச்சையை சம்பாதித்த டீசர் என்பதால் மேலும் எண்ணிக்கையை கணக்கிட்டு கொண்டிருக்கிறோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com